சாதி, மத, வர்க்க வேறுபாடுகள் கடந்து, எல்லோருக்குமான பொது வெளியாக அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே வர்க்கரீதியாக ஆழமான பிளவை கண்டுள்ள திரையரங்குகளின் வரலாறு.... மலையாளத்தின் முதல் சினிமா விகிதகுமாரனை உருவாக்கிய ஜே.சி.டேனியலின் விரிவான அறிமுகம்... திரைப்படங்களின் மீது வைக்கப்படும் தர்க்கத்தை உருவாக்குவது பார்வையாளனா இல்லை படைப்பா.என்பதற்கான விளக்கம்... விசாரணை, சார்பட்டா பரம்பரை போன்ற அறிந்த படங்களின் அறியப்படாத விமர்சன நோக்குகள்... சினிமா என்பது கதை சொல்லும் ஊடகம் அல்ல, அதனால் என்னுடையப் படங்களில் கதை இருக்காது' என்று அறிவித்த அப்பாஸ் கியராஸ்தமியின் படைப்புலகும், கலையாளுமையும்... சமகால மலையாள சினிமாவின் போக்குகள் மற்றும் மலையாள சினிமாவில் தமிழர் குறித்த சித்தரிப்புகள்... சினிமாவின் ஜனநாயகப் பண்பை விவரித்த வால்டர் பெஞ்சமினின் The Work of Art in the Age of Mechanical Reproduction கட்டுரை குறித்த அலசல்... என விரிந்த தளத்தில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. கோட்பாட்டு விமர்சனத்தின் மரபான அணுகுமுறையிலிருந்து விலகி நுட்பமும், செறிவும் கூடிய ரசனை விமர்சனத்தின் வெளிப்பாடு இந்தக் கட்டுரைகள் என்பது இதன் சிறப்பு.
Be the first to rate this book.