யாழிசை மணிவண்ணனின் கவிதைகள் எந்தத் தர்க்கங்களுக்குள்ளும் தலை காட்டாமல் எளியவற்றின் பக்கம் நின்று எம்பிக் குதிப்பவை. இத்தொகுப்பில் யாழிசை தன் மூன்றாவது பார்வையால் மொழியையும் கற்பனைகளையும் யதார்த்தங்களின் வீதியில் வடங்களாகப் பிணைக்கிறார். அவர் இழுக்கும் திசையெங்கும் கவிதைகள் சப்பரமாக உருமாறி இணங்கிச் செல்கின்றன. வழியெங்கும் தான் சந்தித்த மனிதர்களோடு சிலாகித்துப் பேசுகின்றன. புழங்கிய தருணங்களோடு சல்லாபம் கொண்டு இடையிடையே காமத்தின் மண்டகப்படிகளில் அருள் பாலிக்கின்றன.
தேர் தொடங்கிய தேரடிக்கே வந்து நிலைகுத்துவதைப் போல முடிவை நோக்கி நகருவதே இக்கவிதைகளின் பலம்.
-தாயுமானவன் மதிக்குமார்
Be the first to rate this book.