மானிடவியல் ஆய்வுக்கு மட்டக்களப்பு ஒரு தங்கச் சுரங்கம். இதை அகழ்வாய்வு செய்தால் தங்கம் தங்கமாக வெட்டி எடுக்கலாம்.
-பேராசிரியர் சிவத்தம்பி.
ஒரு சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சி என்பது சிறு சிறு பண்பாட்டு நிகழ்வுகளின் கலவை. இதனடிப்படையில்தான் பண்பாடு வளம் பெறுகிறது. எதற்கு இத்தனை மாறுபட்ட சொற்பயன்பாடுகள்? சடங்குகள்?. இலங்கையில் இயக்கர். வேடர், நாகர் போன்ற பூர்வ குடிமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழர்கள் என இணைந்துவிட வேண்டியதுதானே என்ற எண்ணம் எழலாம். ஆனால் இவற்றை இழப்பது ஒரு பண்பாட்டின் செழுமைக்கு பேரிழப்பாகும். ஆகையால்தான் மட்டக்களப்புப் பண்பாட்டை நாம் தேடிச் சென்று ஆய்வு செய்து நூலாக ஆவணப்படுத்தி இருக்கிறோம்.
-முனைவர்.க.சுபாஷிணி
இன்று தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்புகளாக விளங்குபவை தமிழ்நாடு, யாழ்குடா, மட்டக்களப்பு. இம்மூன்று நிலங்களில் மட்டக்களப்பை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? இம்மூன்று பிரதேசங்களையும் மானிடவியலாக வாசிக்கும்போது மட்டக்களப்பில் மட்டுமே மிகத் தொன்மையான தமிழ்ச் சமூகக்கூறுகள் பலவும் உள்ளன என்கிற பேருண்மை வெளிப்படுகிறது. இவ்வளவு காலத்திற்குப் பிறகும் அவை அச்சு அசலாக உயிர்ப்புடன் உள்ளன.இவற்றை மானிடவியல் அதிசயம் ' எனலாம்.
-முனைவர். பக்தவத்சல பாரதி
மட்டக்களப்பின் வரலாறு இருட்டுக்குள் கிடக்கிறது. நாம் வெளிச்சத்தில் தேடக்கூடாது. புறத்தாரும் பேசக்கூடாது. இதனுள்ளே இருக்கின்றமக்கள் இதனை வெளிக்கொணரும் பொழுதே வரலாறு முழுமைபெறும். இதைத்தான் அகத்தார் ஆய்வு என்கிறோம். அது இந்நூல்வழி நிறைவடைந்துள்ளது.
-பேராசிரியர். மௌனகுரு
Be the first to rate this book.