போலித்தனமாக "மது உடலுக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" என சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் மது விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என குறுயீடு தீர் மானிக்கிற அவலம் தமிழ்நாட்டில் தான் இருக்கும்!
அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும். மது உற்பத்தி ஆலை களுக்கும் இருக்கும் நெருக்கமான உறவு ஒட்டு மொத்தத் தமிழினத்தை போதையில் ஆழ்த்தி, தமிழ்நாட்டை அமைதியற்ற நிலமாக மாற்றியிருக்கிறது.
அரசே மதுக்கடை நடத்துவதன் தீய விளைவுகளையும், அதன் பின்னணிக் காரணங்களையும் துல்லியமாக ஆராயும் "மது இல்லாத் தமிழ்நாடு! கற்பனையா?" என்ற தலைப்பிலான பொறியாளர் க. அருணபாரதியின் இந்நூல், டாஸ்மாக் வழியாக வரும் வருமானத்திற்கு மாற்று வழி என்ன என்பதையும் பொறுப் போடு எடுத்துக்கூறுகிறது.
Be the first to rate this book.