கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய “மத்திய கிழக்கு: போரும் புவிசார் அரசியலும்” என்ற நூல், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சிக்கலான அரசியல் போக்குகளையும் அதன் புவிசார் முக்கியத்துவத்தையும் தெளிவான மற்றும் எளிய நடையில் விளக்கும் ஒரு சிறந்த ஆவணமாகும்,. உலக எரிபொருள் தேவையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் இப்பிராந்தியம், ஏன் சர்வதேச வல்லரசுகளின் அதிகாரப் போட்டியின் மைதானமாக (Ground of power
politics) மாறியுள்ளது என்பதை இந்த நூல் ஆழமாகப் பதிவு செய்கிறது.
அமெரிக்காவின் “புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டம்” (PNAC) மற்றும் “புதிய மத்திய கிழக்கு” கொள்கையின் பின்னணியில் ஒளிந்துள்ள ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை இந்த நூல் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது. உலக அரசியல் இருதுருவ நிலையிலிருந்து ஒரு துருவ ஆதிக்கத்திற்கு மாறிய பிறகு, சீயோனிச சக்திகளும் அமெரிக்காவும் இணைந்து மத்திய கிழக்கின் வளங்களை எவ்வாறு சுரண்டுகின்றன என்பதையும், இதற்கு சர்வதேச ஊடகங்கள் எவ்வாறு ஒருதலைப்பட்சமாகத் துணை போகின்றன என்பதையும் ஆசிரியர் விரிவாக அலசியுள்ளார். நீதியும் சமத்துவமும் கொண்ட ஒரு புதிய உலக ஒழுங்கின் அவசியத்தை வலியுறுத்தும் இந்நுால், தற்கால சர்வதேச அரசியல் யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள உதவும்.
Be the first to rate this book.