1931-இல் கல்கத்தாவில், இம்பீரியல் லைப்ரரியில். என்னுடைய பத்தொன்பதாவது வயதில். நான் முதன்முதலாக இந்த மதகுரு நாவலைப் படித்தேன். அன்றுமுதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து வருஷங்களில் நான் இதை, ஆதிமுதல் அந்தம்வரை.
ஐம்பது தடவைகளாவது படித்திருப்பேன். இப்போது மொழிபெயர்க்க உட்காரும்போதுகூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால் தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலுபக்கம் மொழி பெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது.
படிக்கும்தோறும், படிக்கும்தோறும் இந்த நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிது புதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை கவனிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் எனக்குத் தோன்றுகின்றன. செல்மா லாகர்லெவ் என்கிற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் மதகுரு நாவலைப் படித்து முடிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக் கூடியவை என்று நினைக்கத்தக்க நூல்களில் மதகுரு நாவலும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்.
- க.நா. சுப்ரமண்யம்
Be the first to rate this book.