ஒரு காட்சியில் துவக்கம், நடுப்பகுதி, இறுதி எல்லாம் இருப்பது போலவே, ஒரு உரையாடல் பகுதியிலும் துவக்கம், நடுப்பகுதி, இறுதி, சஸ்பென்ஸ், எதிர்பார்ப்பை அதிகரித்தல், அழுத்தத்தைக் கூட்டுதல் என எல்லாமும் அடங்கியிருக்கிறது.
அடிப்படையில் சினிமா ஒரு காட்சி மொழி. அதில் உரையாடல் பகுதிகளுக்கு இரண்டாம் பட்சமான இடமே! ஏனெனில், ஒரு திரைப்படத்தைக் காட்சி மொழியில் நகர்த்துவதனால், உலகில் எந்த மூலையில் இருக்கும் மொழி புரியாதவரும், அந்தப் படத்தைப் பார்த்து புரிந்துகொள்ள முடியும். அதே நேரத்தில், ஒரு படம் என்பது முழுக்க முழுக்க உரையாடல் பகுதிகளைத் தவிர்த்து, காட்சியாக மட்டுமே நகர்ந்துகொண்டிருக்க வேண்டுமா? என்றால் அதுவும் இல்லை,, அப்படிச் செய்தால் ஒரு கட்டத்தில் அது செயற்கையானதாக மாறிவிடக்கூடும். ஆனால், இதில் ஒரு விஷயத்தை மட்டும் மிகவும் உறுதியாகச் சொல்லலாம். அதாவது உரையாடல் பகுதியும் காட்சி ரீதியாக இடம்பெற வேண்டும். அந்தப் புரிதலை இக்குறுநூல் நிச்சயமாக உங்களுக்கு வழங்கும்.
மேலும், கினோவின் முதல் பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போலவே, இப்புத்தகத்திலும், உரையாடல் காட்சிகளைப் படமாக்குவதற்கான 10 சிறந்த காட்சியியல் ரீதியிலான படப்பிடிப்பு வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு அத்தகைய தொழில்நுட்ப நகர்வுகளை எளிமையாக உள்வாங்கிக்கொள்ளும் பொருட்டு, அந்தந்த வழிமுறைகளுக்கு ஏற்ப புகைப்பட உதாரணங்களும் தரப்பட்டிருக்கின்றன. இப்புத்தகம் மீண்டும் ஒருமுறை சினிமா என்பது காட்சிமியல் ஊடகம்தான் என்பதை அழுத்தமாகப் பதிய வைக்கிறது.
Be the first to rate this book.