"கடந்த 1000 ஆண்டுகளின் மிகப் பெரிய சிந்தனையாளர் யார்? என்று பிபிசி செய்தி நிறுவனத்தால் பொதுமக்களிடம் கேட்கப்பட்டதில், முதலிடம் பிடித்தவர் காரல் மார்க்ஸ். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனையாளரான காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் கூட்டுப் படைப்பாளியும் நண்பருமான பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் சேவையும், மிகவும் நெருங்கிய வாழ்க்கையும் உறவுடையது. அவர்களைத் தனித்தனியாகப் பிரிக்க முடியாது என்று மார்க்சின் இளைய மகள் எலியனோர் கூறுவது மிகைப்படுத்தாத உண்மையாகும். மேலும் அவர் கூறுகிறார். "இந்த இரு மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றினை எழுத வேண்டும் என்றால்"கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானம் வரை" சோஷலிசத்தின் வளர்ச்சி வரலாற்றை மட்டுமின்றி, அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிவர்க்க இயக்கம் முழுவதன் வரலாற்றையும் எழுதியாக வேண்டும். இந்நூலை எழுதும் போது இந்த உண்மையை முழுமையாக உணரமுடிந்தது.
இந்த வாழ்க்கை வரலாறு நூல் சாதாரண வாசகர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டது. மார்க்சும் எங்கெல்சும் இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்துக்கும். விஞ்ஞான கம்யூனிசத்துக்கும் எவ்வாறு வந்தடைந்தனர் என்பதை இவர்களது வாழ்வோடும், இவர்களது படைப்போடும் அளித்திடும் போது புதிய வாசகர்களுக்கு மார்க்சியத்தை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
Be the first to rate this book.