'அமெரிக்க இலக்கியத்தின் தந்தை மார்க் ட்வைன்' என்று குறிப்பிடுகிறார் வில்லியம் ஃபாக்னர்.
'ஹக்கிள்பெர்ரி ஃபின்' என்ற மார்க் ட்வைனின் ஒரு புத்தகத்திலிருந்துதான் அமெரிக்க இலக்கியம் முழுவதும் வெளிப்படுகிறது என்கிறார் நாவலாசிரியர் ஹெமிங்வே.
நகைச்சுவையும் பகடியும் ட்வைனுக்கு கைவந்த கலை. 19 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க சமூகத்தின் நியதிகளையும் போலித்தனத்தையும் அவர் கடுமையாக தனது கதைகள் மூலம் விமர்சித்தார்.
அமெரிக்க சமூகத்திற்குள் நிலவிய முரண்பாடுகளையும் குறைபாடுகளையும் பேசியது அவரது தெளிவான குரல்.
அவரது மொழியிலும் கலை நேர்த்தியிலும் ஒரு பிரபஞ்சத் தன்மை அடங்கியிருக்கிறது.
சுரேஷின் இந்த மொழிபெயர்ப்பில் மார்க் ட்வைன் எழுத்தை அசல் தமிழ் படைப்பாகவே வாசிக்க முடிகிறது.
Be the first to rate this book.