கவிதைகளைப் பயன்படுத்தி மகிழ்ச்சியைக் கொண்டுவருதல், மாற்றத்தைத் தூண்டுதல், அல்லது மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் இதுவே கவிதையின் நோக்கமாக இருக்க முடியும் . மார்கழி இசை அப்படிதான். நம் காலம் உலர்த்திய உணர்ச்சிகளின் மீது, உற்சாக நதியின் ஈரக்காற்றை பரவவிடுகிறது. இழந்த ஓரு காலத்தை சொற்களில் கொண்டு வருகிற முயற்சி இது. வாட்சப்பும் இன்ஸ்டாவும் சொந்தமென வாழும் யுகத்தில், கைரேகையுடைய மனிதர்கள் நிலா முற்றத்தில் அமர்ந்து, தம் மகிழ்வையும் துக்கத்தையும் சக உறவுகளோடு பகிர்ந்த காலத்தைக் காட்டும் கவிதைகளிவை. நிலவுடமைப் பண்பாட்டின் வளமார்ந்த பக்கங்களையும் அதன் கசந்த ஞாபகங்களையும் இக்கவிதைகள் கொண்டுள்ளன. ஒரு யுகத்தின் களிம்பைக் கொண்டிருக்கிற இக்கீழடிக் கவிதைகள், தமிழுக்கே உரிய பிரத்யேக கவிதை அழகியலைக் கொண்டவை.
Be the first to rate this book.