இலக்கியம் சாராம்சத்தில் மனித உறவுகளைத் தானே பேசுகிறது. உரையாடுகிறது.விவாதிக்கிறது. புலம்புகிறது, மகிழ்கிறது. நாறும்பூநாதனின் கதைகள் அந்த சாராம்சத்தையே, மையமாகக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் கையெழுத்து, விரட்டப்பட்டவர்கள், முகைதீன் வாத்தியாரும் எலெக்ரிக் குக்கரும், மூச்சுக்காற்று ஆகிய கதைகள் மிக முக்கியமானவை. இந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அன்றாடம் நாம் சந்திக்கிற மனிதர்களே. ஆனால் அவற்றின் மனமாச்சார்யங்களை நுட்பமாகக் கண்டுணரும் கலைஞனாகத் திகழ்கிறார் நாறும்பூநாதன்.
-உதயசங்கர்
Be the first to rate this book.