குளத்தில் தழும்பும் தாமரையைக் கவனமாக விட்டுவிட்டு நன்செய் வழியோர நெருஞ்சி மலர்களைச் சேகரிக்கும் ஒரு நிலப் பித்தனின் மனநிலை வாய்த்திருக்கிறது ஷக்தியின் இந்தக் கவிதைகளுக்கு தன் வாழ்நிலம் மீதான கவனிப்பை சொற்களாக, படிமங்களாக, காட்சிகளாக விவரிக்கிறார் எனச் சொல்வேன் எனில் அதுவே உண்மை.
-கதிர்பாரதி
Be the first to rate this book.