நகரத்துப் பெண் நூனி கர்நாடகாவில் உள்ள தாத்தா பாட்டியின் கிராமத்தில் தன் வாழ்க்கையின் வேகத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள். ஆனால் அவள் விரைவாக அங்குள்ள மென்மையான வழக்கத்திற்குப் பழகி, புதிய நண்பர்களுடன் அப்பளம் தயாரித்தல், சிற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தல், மிதிவண்டி ஓட்டக் கற்றல் என்று பல பரபரப்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாள்.
கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டிற்கு நடுவே ஒரு பழங்கால, கற்பனைக்கதையில் வந்த கிணற்றை எதேட்சையாய், நூனி கண்டுபிடித்த போது, கதைக்களம் சூடு பிடிக்கின்றது.
மனதைக் கவரும் அழகான மற்றும் கீழே வைக்க முடியாத மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுதா மூர்த்தியின் இந்தப் புத்தகத்தில் துணிச்சலான நூனியுடன் வாழ்நாள் தீரச்செயலில் சேர்ந்து கொள்ளுங்கள்.
சுதா மூர்த்தி கர்நாடக மாநிலத்தின் வடபகுதியிலுள்ள ஷிகாவுன் என்ற ஊரில் 1950ம் ஆண்டு பிறந்தார். அவர் கணினி அறிவியலில் எம்.டெக் படித்துள்ளார். அவர் தற்போது இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் எழுதியுள்ள புதினங்கள், சிறுகதைகள், சிறுவர் கதைகள், பயணக் கட்டுரைகள், மற்றும் இதரக் கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. அவருடைய புத்தகங்கள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளில், இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஆர்.கே. நாராயண் விருது (2006), பத்மஸ்ரீ விருது (2006), கர்நாடக அரசால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற அட்டிமாபே விருது (2011) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
Be the first to rate this book.