ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அகன்ற சென்னை மாநிலத்தில் ஆந்திரத் தெலுங்கர்களின் அரசியல் ஆதிக்கம் நிலவியபோது, முதல் முதலாக ஒரு தமிழர் முதலமைச்சர் ஆனார்! அவர்தாம் டாக்டர் ப. சுப்பராயன்! அவர் 4.12.1926 முதல் 27.10.1930 வரை முதலமைச்சராக இருந்து பல சாதனைகளை முதல் முதலாக நிகழ்த்தினார்.
டாக்டர் ப. சுப்பராயன் மிகச் சிறந்த தமிழ் உணர்வாளர். பிற்காலத்தில் விடுதலை பெற்ற இந்தியாவில் நேருவின் அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது திருவள்ளுவர், பாரதியார், உழவன் அஞ்சல் தலைகள் வெளியிட்டார். பணவிடைப் (மணி ஆர்டர்) படிவம் தமிழிலும் வெளிவரச் செய்தார். இன்னும் எத்தனை எத்தனையோ செய்துள்ளார்.
இந்த சுப்பராயனை இப்போதுள்ள தமிழர்களுக்குத் தெரியுமா? தெரியாது/இவற்றையெல்லாம் நீதிக்கட்சிஆட்சி செய்தது; ஆந்திரத்துப் பனகல் அரசர் எனப்படும் இராமராய நிங்கர் செய்தார் என்றெல்லவா திராவிடக் கட்சிகள் பரப்புரை செய்து பாமரர் நெஞ்சிலும் பதியச் செய்துள்ளன!
திராவிடக் கட்சிகளால் மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் முழுவரலாற்றைத் தஞ்சைத் தமிழ்ப்பல் கலைக் கழகக் கல்வெட்டு தொல்லியல் துறையின் முன்னாள் தலைவர் புலவர் செ. இராசு அவர்கள் சான்றுகளோடு எழுதியுள்ளார்.
-பெ.மணியரசன்
Be the first to rate this book.