நீங்கள் உங்கள் விருப்பம் போல காதலித்திருக்கலாம். உங்கள் கொள்ளு பேரன் காதலை அவனது மரபணுக்கள் அனுமதிக்க வேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஊனம் என்பது பத்து மணி காட்சிக்கு எட்டு மணிக்கே திரையரங்கிற்கு வர நேர்ந்தவர்கள் காண நேர்வது என்பதை அறிவீர்களா? நீங்கள் தாத்தா என்று கருதியது நீங்களாகவே இருக்கவும். உங்களுக்குப் பிறப்பது உங்கள் கொள்ளுப் பேத்தியாகவும் இருக்கும். ஆனால், இது எதுவுமே காலப்பயணத்தின் விளைவாக இராது. உங்களுக்குள்ளேயே இருக்கும் மரபணுச் சாத்தியங்கள் வழி எதிர்கால மனித சமூகமும், அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் பத்து சிறுகதைகள் வாயிலாகப் பேசியிருக்கிறேன்.
என்பிறஆக்கங்களைப்போலவே இச்சிறுகதைகளும் என்சிந்தனை மற்றும் மனஓட்டத்திற்குமிகவும் அணுக்கமானவைகளே.அறிவியல் புனைவுகள் என்னும் பரந்து விரிந்த இலக்கிய வகைமையின் விளிம்புகளை மரபணு சாத்தியங்கள் வழி விஸ்தரிப்பதில் இத்தொகுப்பிற்கும் பங்கிருக்கும் என்று நம்புகிறேன்.
-ராம் பிரசாத்
Be the first to rate this book.