பெண்களை மனுஷியாகப் பார்க்காத ஆணாதிக்கச் சமூக அமைப்பும் அதன் வேர்களாக உள்ள வர்ணாசிரம (அ)தர்மமும் மனுவின் (அ)நீதியும் இன்றைக்கும் பெண்களின் மீதான அனைத்து வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கின்றன என்ற கசப்பான உண்மைகளோடு விரிகின்றன இந்நூலின் கட்டுரைகள்.
தமிழ்நாட்டின் மிக முக்கியப் பெண்ணிய எழுத்தாளரான ரமாதேவி, எளிமையும் வலிமையும் மிக்க உண்மையால் ஒவ்வொரு கட்டுரையையும் மிக நுட்பமாகச் சித்திரித்துள்ளார். பெண்ணுரிமையின் மீதான நம்பிக்கையும் கொள்கையும் கொண்ட எல்லாரது சிந்தனையையும் ஊக்குவிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. ரமாதேவி படைத்துள்ள இந்த மனு'ஷி, மனுவின் அநீதிகளையும் ஆதிக்கத்தையும் அழித்தொழிக்கப் புறப்பட்டுவிட்டாள்.
-பாலபாரதி
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றும் முனைவர் ரமாதேவி இரத்தினசாமி, ஐ.நா., யுனெஸ்கோ, யூனிசெஃப், உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகளில் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், சார்க் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர், பெல்ஜியம் உலகக் கல்வி அமைப்பின் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பொறுப்புகள் வகிக்கிறார்.
Be the first to rate this book.