வாழ்வியல் நெறிமுறைகளும், சட்டங்களும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நிலையில் இருந்திருக்கின்றன. அவை காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சில நடைமுறைகள் மாறாமலும் இருந்து வருகின்றன.
அவ்வகையில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வரும் மனுநீதி குறித்த ஒரு தெளிவான பார்வை என்பது நமக்கு அவசியமாகிறது.
எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த மனுநீதி (எ) மனுதர்ம சாஸ்திரம் நூல் சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பாக வெளியான தமிழ் மொழிபெயர்ப்பின் எளிய வடிவம் ஆகும். அக்கால மொழி நடை அனைவருக்கும் புரியாது என்பதால், எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நடைமுறைத் தமிழில் இந்த நூல் எழுதப்பட் டுள்ளது.
இந்த நூலை மொழிநடை மாற்றம் செய்து எழுதியுள்ள நூலாசிரியர், சமஸ்கிருத ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ள பொருள் கொஞ்சமும் மாறாமல், இருக்க வேண்டும் என்பதற் காக, பல தரவுகளை ஆய்வு செய்து, அதன் பின்னரே உரையை எழுதியுள்ளார். முரண்பட்ட பொருள்கள் வேறு வேறு உரைகளில் தென்பட்டால் அதையும் நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு மாற்றுக் கண்ணோட்டமும் இல்லாமல் இந்த மனுநீதி நூலை வெளியிடுவதில் சுவடு பதிப்பகம் மகிழ்ச்சி கொள்கிறது.
- பதிப்பகத்தார்
Be the first to rate this book.