மாயம்
முன்பொருகாலத்தில்
மாயத்தன்மை பிரதியெங்கும்
மழைக்கால இயற்கை போல
இருந்ததாக யார் யாரோ பிரதியை
வாசித்துவிட்டு சொன்னார்கள்
மாயத்தன்மை என்பது பிரதியில்
மருந்துக்கும் இல்லை வறண்ட
ஆறு போல இயற்கையை தொலைத்து
நிற்பதாக நேற்று ஒருவர் சந்தித்தவேளை சொன்னார்
அவருக்கு ஒரு விசயத்தை
மிக ரகசியமாக சொன்னேன்
வேறொரு ஊருக்கு மாயத்தன்மை
பேருந்தில் ஏறி சென்றுவிட்ட கதையை.
Be the first to rate this book.