அக்கறையற்றஉள்ளகிடங்கின் மூலையில் ஒரு புள்ளி வடிவில் தோன்றும் அசலான மகிழ்ச்சியைக் கொண்டாடித் தீர்க்க நெருக்கமானவர்களிடம் சொல்லும் போது அவர்களின்கருத்துகள் நம் சந்தோஷத்தை உருக் குலைக்கச் செய்யும் எனவே அட்டைப் பெட்டியில்காற்றுப் புகாமல் அடைக்கப்பட்டிருக்கும் உணவு பொருட்கள் போலஆனந்தத்தை உள்ளுக்குள் அடுக்கி, அடுக்கி வைப்பதே பேரானந்தம். கூலிவேலை, விவசாயம், கடைகள், காய்கறி வியாபாரம் சொந்தத்தின் உத்தியோகங்கள் மெலிதாக இருந்தாலும் அன்பை வெளிக்காட்ட, பாசத்தை உணர்த்த, நேசத்தின் ஆசீர்வாதத்தைப் பெற, லட்சம் கோடிக்கானசம்பாத்தியம் தேவையற்றது எனினும் வெறும் அன்பை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்திவிட முடியாது. பெண்பிள்ளைகளுக்குத் தலையில் எண்ணெய் வைத்து ஜடைபின்னித்தலை முடியை ஒழுங்கு செய்து பள்ளிகூடத்திற்கு அனுப்பி வைக்கின்ற பெண்களில் ஒருவரேனும்தலை விரித்தாடும் இந்த வேப்பமரத்தை ஏன்? வாரி முடிச்சி கொண்டை போட்டுவிடயோசிக்கவில்லை வைராக்கியத்தைத்தூவி விடுகின்ற அவமானத்தைச் சேர்த்து வைத்து அதிலிருந்து நூல்பிடித்து எதிர் நோக்கிய இடத்திற்குப் போராடி… தூற்றியவர்களின் முன்னால் உன் கொடிபறப்பதே உழைப்பிற்குக் கிடைத்த பலன். அச்சமற்ற உறுதியான செயலின் விளைவுகளால்உண்மையில் நினைத்தது சாத்தியமாகும்.
Be the first to rate this book.