மனிதன் எப்போது தோன்றினானோ அவனுடன் சேர்ந்தே மர்மங்களும் தோன்றிவிட்டன. சொல்லப் போனால் மனிதன் தோன்றியது எப்படி என்பதே இன்னும் மர்மமாகத்தான் இருக்கிறது. உலகம் முழுவதும் பல மர்மங்களும் அமானுஷ்ய நிகழ்வுகளும் ஆதி முதல் இன்று வரை நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஆவி, முற்பிறவி எண்ணங்கள் போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மனிதனைத் தொடர்ந்துகொண்டே வருகின்றன. உலகம் முழுதும் நடைபெற்ற இப்படிப் பட்ட அமானுஷ்ய, திகிலுடன் கூடிய சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றி ‘குமுதம் ரிப்போர்ட்டர்' இதழில் மதன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஆவியில் நல்லது செய்யும் ஆவி, பயமுறுத்தும் ஆவி, அடிக்கடி பூமிக்கு வந்துபோவதாகச் சொல்லப்படும் ஏலியன்கள், திடீரென்று கொட்டிய மீன், தவளை மழை, முற்பிறவி நினைவுகள், நடக்கப்போகும் சம்பவங்கள் முன்கூட்டியே சொல்வது என அனைத்து அமானுஷ்ய சம்பவங்கள் பற்றி தன் சுவாரஸ்ய எழுத்து நடையில் சுவைபடச் சொல்லியிருக்கிறார் மதன். இனி உலகில் நடந்த திகிலான அமானுஷ்யங்களை அறிந்துகொள்ள ஆயத்தமாகுங்கள்!
Be the first to rate this book.