பெரியசாமித் தூரன் (1908-1987) தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பகுதியினராலும் போற்றப்படுவதற்குக் காரணமாயிருந்தவை அவரது கீர்த்தனைகள். தமிழ் இறையியலின் வெளிப்பாடாகக் காணப்படும் இவற்றில் பக்தியை விட ஆன்மீகமே மேம்பட்டுத் தெரியும். தமிழ்ச் சமூகம் வறுமையிலும், அறியாமையிலும் சிக்கிக்கிடந்த ஒரு வரலாற்றுக் கால கட்டத்தில் ஐரோப்பிய அறிவுசார் நாகரிகத்திற்கு இணையாகக் கருதப்படும் தமிழ்க் கலைக் களஞ்சியம் உருவாவதற்கு அரும்பாடு பட்டவர். இவரது புனைகதைகள் அடிப்படையில் சமூக ஆவணங்களாகக் கருதப்பட்டாலும் அவற்றின் அழகியல் அம்சங்களும் புறக்கணிக்க முடியாதவை.
தமிழில் நோய்க்கூறுகள் இல்லாத பண்பாட்டுப் பங்களிப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் பெரியசாமித் தூரன். அவரது பிரமிக்கத்தக்க ஆளுமையின் கூறுகளை அடையாளம் காணும் முயற்சியே இந்நூல்.
Be the first to rate this book.