மணி போல் தெளிந்த நீரும், புல்வெளி, புதர்க்காடு நிலம் மலையும் அழகிய நிழலையுடைய காடும் என இயற்கை வளங்கள் நான்கையும் உள்ளடக்கியது. ஒரு நாட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும்' என குறளுக்கு விளக்கம் அளித்தனர். இயற்கை வளங்களை, 'பாதுகாப்பு அரண்' என தமிழர்களின் மூதாதையரான வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார்.
'தூய காற்று நிலம் மண்ணை இயற்கையின் மூல வளங்களாக முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர்' என்று பேராசிரியர் தொ.பரமசிவன் கூறியுள்ளார்.
பல நூறாண்டுகளுக்குப் பின்பு, இந்த நான்கு நிலங்களுக்கும் ஏற்படும் சிக்கல்களை, பாதிப்புகளை, அழிவுகளை விரிவாகவும், ஆழ அகலத்துடனும் இயங்கியல் போக்கில் 'மணிநீரும் மண்ணும்' நூலில் தோழர் அருண் நெடுஞ்செழியன் பேசியுள்ளனர்.
Be the first to rate this book.