வியாசரின் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு. வில்லிபாரதம். நல்லாப்பிள்ளை பாரதம், இந்தோனேஷிய பாரத யுத்தம், வியாசர் விருந்து, மகாபாரதம் பேசுகிறது போன்ற பிற பதிப்புகள் வெளிவந்துள்ளது. இந்த பதிப்புகளையெல்லாம் துணை நூல்களாகவும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆய்வு நூல்களாகவும் கொண்டு கர்ணன் என்ற மகாபாரத கதாபாத்திரத்தை மையப்படுத்தி மணிமான் மைந்தன் என்ற இந்த இதிகாச புனைவை படைத்திருந்தேன். துரோகங்கள் எப்படி ஒரு மனிதனை பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து வந்தது என்பதையும், அதன் மூலம் அவன் பட்ட அவமானங்களையும், இழப்புகளையும் விரிவாக வாசகர்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு எளிமையான முயற்சியே இந்த புதினம் என்றால், அது மிகையாகாது.
கர்ணன் என்ற சுதாபாத்திரம் இப்படியும் இருந்திருக்கலாம் என்ற கற்பனையே மணிமான் மைந்தன் என்ற புதினம். இதுவரை அறியப்படாத பல தகவல்களை இந்த புதினம் வழியாக வெளிப்படுத்த முயன்று இருக்கிறேன். மணிமான் மைந்தன் என்ற இந்த இதிகாசப் புதினம் கர்ணன் என்ற கதாபாத்திரத்தை நிச்சயமாக மற்றவர்கள் இரசிக்கும்படி செய்யும் என்று உறுதியாக நம்புகிறேன்.
பாசமுடன்,
-பாரதிப்பிரியன்.
Be the first to rate this book.