அறிவியல், ஆன்மிகம், அரசியல், வரலாறு, பொய்கள், உண்மைகள், அற்புதங்கள், அற்பங்கள் அடுக்கப்பட்ட ஒரு நூலகம் எரிந்து (கொண்டிருப்பதைப் போலந்தான் எனக்கும் இந்தப் பூமியைப் பற்றித் தோன்றுகிறது. பூமியின் நுரையீரல் அமேசான் காடுகள் எரிந்து கொண்டிருக்கும் செய்தியை ஒரு தேநீர் இடைவேளையில் கடந்து போகும் மனிதர்கள் தானே நாம்... ஆனால் ஒரு சுலிஞனால் அப்படி இருக்க முடியாது. அவன் எரியும் நூலகத்துக்கு நடுவே எரியும் கேள்விகளோடு நிற்கிறான். சதா விடைகளைத் தேடிய படியே இருக்கிறான். அப்படி ஏராலமான எவுகீக கேள்விகளுடன் இயற்கைக்குள் அதற்கான விடைகளைத் தேடும் தேடலுடனும் இருக்கும் அன்பராகத்தான் இந்தக் கவிதைகளை எழுதிய மண்டையகராதியும் எனக்குத் தெரிகிறார்.
எவ்வளவு பெரிய ஆலயத்திற்குப் போனால்தான் என்ன... நெஞ்சில் நாம் எடுத்துவருவது சின்னஞ்சிறிய தீபத்தைத்தானே. இந்தச் சின்னஞ்சிறிய படைப்பு வெளிச்சத்தை விடாமல் இன்னும் இன்னும் பரப்பிக் கொண்டே இருங்கள் மண்டையகராதி... வாழ்த்துகள்!
-ராஜுமுருகன்
திரைப்பட இயக்குநர்
5
Aswini M 23-09-2024 06:15 pm