மனக்கட்டுப்பாடே, இன்பமான, நிறைவான வாழ்க்கைக்கு உதவும் திறவுகோல் ஆகும். உங்கள் மனம்செய்யும் தந்திரங்களை உணர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளையும், தெளிவையும் அறிந்துகொள்ளவும், அதன் மூலம், மனத்தின் பிடியிலிருந்து நீங்கள் விடுதலை அடையவும், இந்நூல் மிகவும் அழகாக முறையில் உங்களுக்கு அறிவுறுத்துகிறது.
-ஜாய் ஷெட்டி
உங்கள் மனத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வையுங்கள்.உங்கள் வாழ்க்கையை உங்கள் வசமாக்குங்கள்.
அதிக விற்பனையைச் சாதித்த நூலாசிரியரும், வாழுங்கலை பயிற்சியாளரும் ஆகிய கோர் கோபால் தாஸ், இந்நூலின் மூலம் மனத்தின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அவருக்கே உரித்தான பாணியில், சிறுசிறு நிகழ்வுகளை உதாரணம் காட்டி, மனத்தை எப்படிப் புரிந்துகொள்வது, அதை எப்படிக் கட்டுப்படுத்துவது, அதன் மூலம் முழுமையான மனநலனை எவ்வாறு பெறுவது போன்றவற்றைக் குறித்து நமக்கு விளக்குகிறார். இந்நூலில், பல்வேறு பயிற்சிகள், தியான வழிமுறைகள், செயல்திட்டப் படிவங்கள் போன்றவற்றை நமக்கு அளித்து, அவற்றின் மூலம் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களை அடைந்து, நம்முடைய மனத்தையும், செயல்களையும் கட்டுப்படுத்தும் கலையை நாம் கற்றுக் கொள்ளவும் உதவுகிறார்.
மேம்பட்ட, நிறைவான எதிர்காலத்தைப் பெற விரும்பும் எவருக்கும், இந்நூல், மிகவும் தேவையான ஒன்றாகும்.
Be the first to rate this book.