'அரிது, அரிது மானிடருள் வாசிப்பவர்கள் அரிது, அதனினும் அரிது வாசித்ததைக் கட்டுரையாக வடிப்பவர்கள்' என்னும் இன்றைய சூழலில் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கிக் கொடுத்திருக்கிறார். இவர் வாசித்து விமர்சனம் எழுதிய இந்த 17 நூல்களுக்குள் வாழ்க்கை வரலாறு இருக்கிறது; தன் வாழ்க்கை வரலாறு இருக்கிறது; வரலாறு இருக்கிறது; கட்டுரைத் தொகுப்புகள் இருக்கின்றன; நேர்காணல்கள் இருக்கின்றன; சிறுகதைத் தொகுப்புகள் இருக்கின்றன; கவிதைத் தொகுப்பு நூல்கள் இருக்கின்றன. இப்படித் தன் மனதிற்கு நெருக்கமாக இருந்த 17 நூல்களின் நூல் விமர்சனங்களை இவர் தொகுப்பாகக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
இவரது நூல் விமர்சனங்கள் வெறும் பாராட்டுரையாக மட்டும் அமைவதில்லை. சில நேரங்களில் கடுமையான சொற்களைப் பயன்படுத்தியும் எழுதுகிறார்.
-முனைவர் வா.நேரு
Be the first to rate this book.