மனதையும் அது நடத்தும் மாயங்களையும் புரிந்து கொள்ள, மெல்ல மெல்ல, மனதின் ஆழமான, மிக ஆழமான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும் புத்தகம் மனதெனும் குரங்கை வெல்லுங்கள் (MASTER THE MIND MONKEY), எளிதில் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளை அது வெளிக் கொணரும் முறை ஒருவருடைய சொந்த வாழ்க்கையிலும் தொழில் ழ்ளிலைகளிலும் அவைகளை எளிதாக கடைப்படிக்கும் வகையில் அமைந்துள்ளது. நேரடியான மற்றும் தெளிவான உரையாடல் நடை நீங்கள் கடைமுடிவான அறிவாற்றல் எய்துவதை எளிதாக்குகிறது ஓட்டத்தில் ஒரு இனிமையான மென்மை சொற்களில் இதயத்தைத் தொடும் எளிமை மேலும் வழக்கு சொற்களை விடுத்த வாக்கியங்களில் ஓர் புத்துணர்வு வீசுகிறது.
நீங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க அருமையான உதாரணங்களும் நகைச்சுவை கலந்த உபகதைகளும் புத்தகம் முழுவதிலும் நிறைந்துள்ளன. நம்மைப் பாராட்டி சக்தியூட்டுகையில் பொய்ம்மையையும், மனச்-சோம்பலையும் பழி சுமத்துவதையும் ஒப்பய பொறுப்பன்மையையும் ஓர் இரக்கபாவத்துடன் சாடுகிறது.
நம்மை மாற்றும் ஓர் தாக்கமுள்ள அனுபவமாக நம்முடைய அறிவாற்றலுக்கும் அதனால் எய்தக்கூடிய நிச்சயமான பலன்களுக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. இந்தப் புத்தகம்.
நிர்வாக இயலில் முனைவர் பட்டம் பெற்ற ஆனந்த் பாட்கர் பல்துறைத் தொழில் அனுபவம் பெற்றவர். முறையான கல்வியை முடித்தபறகு இருபது ஆண்டுகள் இந்திய கூட்டுரிமை. நிறுவனங்களில் முக்கியமாக செயல்-திட்ட முறை, நிதி வளம். மனித வளம் ஆகிய துறைகளில், மேலாளராகப் பணியாற்றியிருக்கிறார். மும்பையின் முன்னணி வணிகத் துறை பள்ளிகளில் வருகை தரும் ஆசிரியாகவும் இருந்துள்ளார்.
தற்பொழுது சுயமாகப் பணியாற்றும் மேலாண்மை ஆலோசகராகவும், இயக்குனராகவும், நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிப்பவராகவும் உள்ளார் அவரின் கல்வி, ஆசிரியப் பணி, தொழில் மற்றும் பயிற்சி அனுபவங்கள் ஆகியவைகளின் கூட்டே இந்தப் புத்தகம், பலதரப்பட்ட மேல் நாட்டு மற்றும் கீழ் நாட்டு மனப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் தத்துவங்களால் மலர்ந்திருக்கிறது.
Be the first to rate this book.