கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான, ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது. கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம், ஆண் - பெண், இளமை - முதுமை, உறக்கம் - விழிப்பு, அன்பு - வெறுப்பு, இந்தியா - பாகிஸ்தான் எனப் பல்வேறு எல்லைகளினூடே நாவல் பயணிக்கிறது. இந்த நாவலின் உலகம் நன்கு அறிமுகமானது போலவும் மாயஜாலம் போலவும், இரண்டிற்குமிடையேயான வேறுபாட்டை அழித்தபடி துலங்குகிறது. காலம் நிலையில்லாத் தன்மையில் புலப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் இறந்த காலத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. ஒவ்வொரு கணமும் வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது. ஆங்கில மொழியாக்க நூலுக்கான புக்கர் விருது (2022) பெற்ற, ‘ரேத் சமாதி’ (Tomb Of Sand) என்னும் இந்தி நாவலின் நேரடி மொழியாக்கம் இது. சமகால இந்தியின் வாசனைகளையும் பன்முகக் குரல்களையும் சேதமில்லாமல் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி.
Be the first to rate this book.