சூரியராஜன், என்ன சொல்கிறார் என்பதைவிடவும், என்ன அனுபவத்தை நமக்குத் தர விரும்புகிறார் என்பது என் போன்ற வாசகர்க்கு முக்கியம். மனிதத் துயர்கள், கசப்பையே தருகிற வாழ்க்கைப்பாடுகள் இவைகளினூடாக வாழ்ந்தே தீர வேண்டிய விதிக்கப்பட்ட வாழ்க்கை, மகிழ்ச்சி தராத வாழ்க்கை, எல்லாவற்றையும், அவர் கதைகள் நம் அனுபவங்களாக்க முயலுகின்றன. என்றாலும் இவைதானா? இல்லை. ஏசு என்றால் சிலுவை மட்டும் இல்லை. ஏசு என்றால் மலைப் பிரசங்கங்கள், நண்பர்களுக்குக் காட்டிய ஆதரவு, ஆதிக்க மோதல் என்பது போல, அவர் கதைகளில் நிலத்தடி நீராகப் பல பிம்பங்கள் உண்டு. கசப்பில் இருந்து எழும் நகைச்சுவை, மனித நேயம் என்ற பாலத்தில் வாழ்க்கையைக் கடப்பது, எல்லாத்துக்கும் மேலே இந்த படைப்புகளில் இருந்து, மனித குலம், வாழக்கைக்குத் தீட்ட வேண்டிய வர்ணம். என்பவையும் வெளிப்படுகிற விதமாய் இருக்கின்றன இவர் கதைகள்.
-பிரபஞ்சன்
Be the first to rate this book.