இரண்டு மூன்று வயது குழந்தைகளுக்கு கூட, அவை நினைத்தது நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது. கையில் இருப்பதை தரையில் எறிகிறது. பள்ளி மாணவர்கள் டென்ஷனாக இருக்கிறது என்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் ஸ்டிரஸ் என்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரி குறித்து கேட்கவே வேண்டாம். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் குறித்து ஏகப்பட்ட வருத்தங்கள் கோபங்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். உலகம், போட்டி, பொறாமை, ஆற்றாமை, வருத்தம் போன்றவற்றால் சூழப்பட்டிருக்கிறது. பொது தேர்வுகள், போட்டித் தேர்வுகள், பதவி உயர்வுகள், மணவாழ்க்கை, வியாபாரத்தில் வெற்றி என மக்கள் சந்திக்கும், தேடும் பலவும் அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. செயல்பாடுகள் குறைந்து, வெற்றிகளை தள்ளி போவதற்கு காரணம், மன அழுத்தம்தான். அது என்ன? எதனால் வருகிறது? அதை எப்படி குறைப்பது? போன்றவை குறித்து எளிமையான விளக்கம் தரும் ஒரு புத்தகம்.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.