சரோஜா ராமமூர்த்தி (ஜூலை 27, 1921 ஆகஸ்ட் 8, 1991) நவீனத்தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி. அறுநூறுக்கும் அதிகமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். 1943ம் ஆண்டு எழுத்தாளர் து.ராமமூர்த்தியை மணந்துகொண்டார். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 'பாரதி' என்ற பெயரில் கையெழுத்து இதழ் நடத்தினார். சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, மங்கை, சக்தி, கலைமகள், நவசக்தி, காதல், அமுதசுரபி, தினமணிகதிர், வீரகேசரி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். இவரது நூல்களை தமிழ்நாடு அரசு 2010 ம் ஆண்டு - நாட்டுடைமையாக்கியது.
Be the first to rate this book.