ஏ தமிழ் நாடே! ஏ தாழ்ந்த தமிழ் நாடே! தேய்ந்த தமிழ் நாடே! தன்னை மறந்த தமிழ் நாடே! தன்மானமற்ற தமிழ் நாடே! நன்றிகெட்ட தமிழ் நாடே! கலையை உணராத தமிழ் நாடே! கடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! ஏ. சோர்வுற்ற தமிழ் நாடே! வீறு கொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று! உயிர்க் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று! புரட்சிக் கவிகளைப் போற்று!! புத்துலகச் சிற்பிகளைப் போற்று!!! மக்கள் கவிஞனின் பணி ஒரு புரட்சியாளனின் பணியாகும் - சொல்லப்போனால் புரட்சியாளனின் பணியைவிடவும் கடினமானதாகும், ஏனென்றால் மக்கள் கொடுங்கோலரை மீட்பர் என்றும், மீட்பரை கொடுங்கோலன் என்றும் தவறாகப் புரிந்துகொள்ளத் தக்கவர்கள்.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.