உரிமை!! அந்தச் சொல்பற்றி, ட்யூடர் காலத்தில் அதிகமான கவலை கொள்ளாதிருந்த மக்கள், ஸ்டூவர்ட்டு மன்னர்கள் பேசிவந்த 'ஆண்டவன் அருள்' தத்துவத்தால், மன்னன் உரிமை இது என்றால், மக்களின் உரிமை என்ன, என்று எண்ணலாயினர். எண்ணிய போது, மக்களுக்கு முன்னாள் நினைவுகள். முந்திய வரலாற்றுச் சம்பவங்கள், தம் மூதாதையர், போரிட்டுப் பெற்ற உரிமைகள், அந்த உரிமைகளின் காரணமாக, மன்னன் மக்களின் மூலமே அதிகாரம் பெறுகிறான். ஆகையால், மக்களின் ஆதரவு பெற்றே அரசாள வேண்டும். என்ற உண்மை, இவ்வளவும் தோன்றலாயின! மக்கள் கரம். மன்னன் சிரத்தையும் கொய்துவிடும் வலுப்பெற்றது. அது ஏர்பிடிக்கும், துலாக்கோல் பிடிக்கும். கூப்பும், தழுவும், வரிசெலுத்தும், வணக்கம் கூறும்-ஆனால் தாங்கோணாத கொடுமை செய்து, உரிமையைப் பறித்திடக் கொடுங்கோலன் கிளம்பினால், அந்தக் கரம், அவன் சிரம் அறுக்கும்.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.