ஆசிரியர் சண்முகக் கவிராயர்: நவீன காலத் தமிழின் முதல் கதைசொல்லி. தமிழில் பதினெட்டுப் பருவங்களும் கொண்ட முழுமையான பாரதம் நல்லாப்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட பாரத நூலே. செய்யுள் நடையில் இயற்றப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதத்தை எளிதில் வாசிக்க இயலவில்லை. சண்முகக் கவிராயரால் வசன காவியம் என்ற வடிவில் எளிய உரைநடையில் இயற்றப்பட்டதே இந்நூல். புதிய இலக்கியத்திற்கான படைப்பாற்றல் மிக்க நடையில் சண்முகக் கவிராயர் இதை எழுதியுள்ளார். தொண்டை மண்டலப் பகுதியில் பாரதச் சொற்பொழிவாளராகத் திகழ்ந்துள்ளார். காலனிய ஆதிக்கத்தின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான சமயக் குழுக்கள் பல்வேறு ஆக்கப் பணிகளை மேற்கொண்டன. சதுர்வேத சித்தாந்த சபை என்கிற சமயக் குழுவின் வெளிப்பாடாகவே இப்படைப்பு உருவாகியுள்ளது.
Be the first to rate this book.