நம் குடும்பத்தில் ஒரு புதிய உயிர் பிறந்திருக்கிறது என்ற செய்தியைக் கேள்விப்படும் எவரும் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது. அதே போல, நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த மகிழ்ச்சியை அடையாமல் நாம் கடந்து விடவும் முடியாது.
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமான தேவைகள் நமக்கு உருவாகின்றன. அவை பூர்த்தி அடையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. அப்படி தேவைப்படும் பொருட்களின் வழியாகக் கிடைக்கும் மகிழ்ச்சியையும், ஒரு குழந்தை பிறந்த மகிழ்ச்சியையும் ஒப்பிடவே முடியாது. இல்லையா?
இன்றைய நம் நவீன வாழ்வில் பல மகிழ்ச்சிகளைத் தொலைத்து வந்துள்ளோம். ஆனாலும், குழந்தைகள் மூலம் கிடைக்கும் மகிழ்வு இன்னும் நம்மைத் தொடர்கிறது. அடுத்தடுத்த சந்ததிகளுக்கு இந்த மகிழ்ச்சியை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகம் தான். எவ்வளவோ பழைய விஷயங்களை நவீனத்திற்கு காவு கொடுத்துள்ளோம். எப்போது குழந்தைகள் மூலம் உருவாகும் மகிழ்ச்சியை நாம் இழக்கிறோமோ, அப்போது துவங்குகிறது மானுட அழிவு.
இன்றைய தலைமுறை பெண்களுக்குப் பிரசவம் என்ற வார்த்தை மருத்துவமனை தொடர்பான சொல்லாடலாக மாற்றப்பட்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் கத்தியின் உதவியின்றி பெறப்படும் குழந்தைகள் 'மெடிக்கல் மிராகிள்'களாக மாறப்போவது நிச்சயம்.
Be the first to rate this book.