மகளிரும் மகப்பேறும் என்ற இந்நூல் முழுமையாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல், வளர்ந்து ஆளாகி, பருவமடைந்து, திருமணமாகி, கர்ப்பமடைந்து, பிரசவமாகி, மேலும் பாலூட்டும் காலத்திலும் அதற்கு பின்னும், மாதவிடாய் நிற்பதற்கு முன்னும் பின்னும் உள்ள நிலை வரை எழுத எண்ணியே தொடங்கப்பட்டது.
பொதுவாக மருத்துவரிடம் ஆலோசனை நேரத்தில் நிறைய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடிவதில்லை என்ற குறை நிறைய பேருக்கு உண்டு. அக்குறையைப் போக்க ஒரு மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவராகிய நான், அனைத்து பருவ காலங்களிலும், பெண் நலம் பற்றியும், மகப்பேறு பற்றியும் உள்ள மருத்துவ முறைகள் குறித்து எளிய முறையில், அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் எழுதும் நூல் இது. பிறந்த குழந்தை முதல் இளம் பருவத்தினர் வரை (நாள் 1 முதல் வயது 24 வரை), இந்த பாகத்திலும், ஏனையவற்றை அடுத்து வரும் பாகங்களிலும் காணலாம்.
Be the first to rate this book.