துப்பறியும் நாவல் போல ஒரே மூச்சில் படித்து விடக்கூடியது உங்களுடையது. சரித்திர ஆதாரங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லிக் கொண்டே போயிருக்கிறீர்கள். எத்தனை நூல்கள் படித்திருக்கிறீர்கள். எத்தனை செப்பேடுகள், எத்தனை கல்வெட்டுகள், எத்தனை ஆய்வு கட்டுரைகள்... ஆச்சரியமாக இருக்கிறது தம்பி.
-எழுத்தாளர் தமிழ்மகன்
பொதுவாக, வரலாற்றுப் புதினங்களை எழுதுபவர்களுக்குச் சில குறைகள் உண்டு. கதாநாயகனாக வரும் அரசனையும் அவனுடைய குலத்தையும் தூக்கிப் பிடிப்பதற்காக எதிர்த் தரப்பு அரசர்களை கொடூரமான வில்லன்களாகக் காட்டிவிடுவார்கள். அதற்குக் கற்பனையைத் துணைக்கு அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்தத் தவறை ஜி.ரா செய்யவில்லை என்பது முக்கியமான விஷயம். பாண்டியர்களின் தரப்பிலிருந்து இந்தப் புதினம் எழுதப்பட்டாலும் சோழர்களின் வரலாற்றையும் நியாயமான முறையிலேயே இந்தப் புதினம் தொட்டுச் செல்கிறது.
-எஸ். கிருஷ்ணன்
Member. Prime Ministers Museum and Library Society.
முற்பகுதியில் சோழர்களுக்கும் இராஷ்டிரகூடர்களுக்கும் இடையில் நடக்கும் போரை குறித்த விவரிப்பிலும், பிற்பாதியில் ஆதித்தனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடக்கும் போரை குறித்த விவரிப்பிலும் போர்க்களக் காட்சிகளைக் கண் முன் விரிவடையச் செய்கிறார். "எந்த நாட்டின் படைவீரன் யார் மூட்டிய தீயில் எரிகிறான் எனத் தெரியாத நிலை" இவ்வரிகள் போரின் கையறு நிலையை உணர்த்துகிறது. மிகக்கூர்மையான வாக்கியம் இது.
-எழுத்தாளர் நர்சிம்
தூத்துக்குடியில் பிறந்து சென்னையின் எண்ணிக்கையில் கலந்துவிட்ட ஜிரா... எழுதப் படித்துக் கொண்டிருப்பவன்.வலைப்பூ காலம் தொடங்கி, எழுத்தோடும் தமிழ்க்கூட்டத்தோடும் தொடர்ந்து பயணிப்பவன். சங்கத்தமிழ்.சிலப்பதிகாரம், திருப்புகழென்று செவ்விலக்கியம் மட்டுமல்ல... மக்கள் இலக்கியத்திலும் எளிய எழுத்துகளிலும் மேய்ந்து கொண்டிருப்பவன். முரண்களின் அரண்.
இவன் எழுதுவதெல்லாம் இவனுக்கு இவனே சொல்லும் கதைகள்தாம். இலக்கியத்துக்கு இலக்கணமில்லை என்று நம்புகிறவன். திரைப்பாடல்களை வைத்து 'நாலு வரி நோட்டு'. சிறுகதைத் தொகுப்பாக 'என் கொங்கை நின் அன்பர்', 'சுவீட் காரம் காப்பி'. புதினமாக 'காமரூபவல்லி' ஆகிய நூல்களை அளித்தவன்.
Be the first to rate this book.