நாயக்கர்கள் மட்டும் மதுரையை அரசாளவில்லை என்றால் மதுரை இப்போதும் ஒரு கிராமமாகவே இருந்திருக்கும். அந்நியப் படையெடுப்பிலிருந்து மதுரையைக் காத்தவர்களும் அவர்களே. இன்றைக்கு நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும் கொண்டாடும் திருவிழாக்களும் நாயக்கர்கள் நமக்குக் கொடுத்த கொடைகளேயாகும். மக்களுக்கும், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்குமான பல்வேறு நன்மைகள் அவர்களால் உருவாக்கப்பட்டவையே. வரிவிதிப்பு முறைகள் சீரடைந்தன.
இந்லை எழுத நாயக்கர் கால மதுரை மண்டலத்தின் பெரும்பகுதிக்குப் பயணம் செய்தும் புகைப்படங்கள் எடுத்தும் வரலாற்றுச் சான்றுகளைச் சரிபார்த்தும், கூடுமானவரை நடந்ததை நடந்தவாறே எழுதியுள்ளேன். உண்மையில் நாயக்கர் வரலாறு மிகவும் சுவையானதாகவே எழுதியுள்ளேன். உண்மையில் நாக்கர் வரலாறு மிகவும்சுவையானதாகவே இருக்கிறது. சண்டை- சமாதானம், மகிழ்ச்சி-துக்கம், விசுவாசம்-வஞ்சகம், வீரம்-கோழைத்தனம், நேர்மை-இலஞ்சம், பாலதார மணம் – ஒருதார மணம் போன்ற அனைத்தும் இவ்வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.
பொன்னுசாமி சுந்தர்
Be the first to rate this book.