மதுரமான மாநகரில் சிவபெருமான் எனும் இந்நூல் வியத்தகு வல்லமை படைத்த இறைவன் நீலகண்டன் லீலா விநோதங்களை படபடப்பூட்டும் கிளர்ச்சியுடன் வெளிப்படுத்தி, விண்ணுலகம், மண்ணுலகம் மற்றும் பாதாளலோகம் அனைத்திலும் இடம் பெறுவதாகக் காட்டப்பட்டுள்ளது.
இப்புராணக்கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக பண்டைய தேவர்கள், அசுரர்கள், சாதுக்கள், மக்கள் மற்றும் கற்பனையில் உருவான மிருகங்களின் மதியீனங்களை விவரித்துக் காட்டுகின்றன. அவற்றில் எல்லாம் சிவன் யாசகனாக, துறவியாக, அரசனாக, வணிகனாக, மீனவனாக, வேடனாக, போர் வீரனாக, விறகுவெட்டியாக வேடங்கள் பூண்டு கொடுமை செய்யும் கொடியோரை அழிப்பதற்கு மூவுலகங்களையும் வலம் வருவதுடன், பேரானந்தத் தாண்டவம் புரிந்து நல்லவர் கெட்டவர் அனைவரையும் ஒன்றாகவே எண்ணி அரவணைத்துக் கொள்கிறார்.
அதுபோல் சிவன் பலமுகங்கள் கொண்டதொரு கலவையாகவே எல்லாவற்றிலும் சித்தரிக்கப்படுகிறார். பெண் கடவுள் மீனாட்சியை மணம்புரியக் கோரி மணந்து கொள்ளும் மென்மையான காதலனாக, ஞானத்தை எல்லையற்று அள்ளி வழங்கும் குருவாக நெருப்புப் பொறி பறக்கும் மூன்றாவது கண்ணால் அச்சுறுத்திப் பழி தீர்ப்பவனாக, தம் அடியவர்களுக்குக் கருணையுடன் அருள் பொழிந்து உதவுபவனாக, நயமான குறும்புக்காரனாக, எல்லாவற்றிற்கும் மேல் வேதங்களின் சாராம்சத்தைக் காக்கும் பாதுகாவலனாகக் காட்டப்பட்டுள்ளார்.
Be the first to rate this book.