பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவின் श्री L (The Godfather), இத்தாலிய-அமெரிக்க மாஃபியா சமூகத்தின் ஒரு மானுடவியல் ஆய்வு, அது அவர்களின் குடும்ப அமைப்பு, அதிகாரப் படிநிலைகள், விசுவாசக் கோட்பாடுகள் மற்றும் சடங்குகள் (திருமணம், ஞானஸ்தானம், இறுதிச் சடங்கு) ஆகியவற்றை ஒரு புனைவுக் கதைக்குள் ஆழமாகப் பதிவு செய்தது.
அதேபோல், பெர்னாண்டோ மெரெல்லிஸின் 'சிட்டி ஆஃப் காட்' (City of God), ரியோ டி ஜெனிரோவின் ஃபவேலாக்களின் (favelas) சமூக அமைப்பையும், வன்முறைச் சுழற்சியையும், அதன் தனித்துவமான மொழியையும், ஒரு புனைவாக இருந்தாலும் அதிர்ச்சியூட்டும் யதார்த்தத்துடன் ஆவணப்படுத்தியது.
இந்தப் படங்கள் ஒரு பண்பாட்டைச் சுற்றுலா' செல்வது போல் மேலோட்டமாகப் பார்க்கவில்லை; அவை அந்தப் பண்பாட்டிற்குள் 'வாழ்ந்து' (inhabit), அதன் சமூக நரம்பு மண்டலத்தையே (social nervous system) பிரித்து ஆராய்கின்றன. தமிழ் சினிமாவின் பரந்த வெளியில், விகரம் சுகுமாரன் அவர்களின் "மதயானைக்கூட்டம்" இந்த அரிய வகை மானிடவியல் புனைவுத் திரைப்படங்களின் மரபில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
-பேராசிரியர் சொர்ணவேல் மிச்சிகன் பல்கலைக்கழகம், அமெரிக்கா.
Be the first to rate this book.