வித்துவான் பாவலரேறு பாலசுந்தரனார் (1924-2007) மரபிலக்கண அறிஞர்: படைப்பாளர்; ஏறத்தாழ ஐம்பது நூல்களின் ஆசிரியர். அவரது தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை (5 பகுதிகள்) வாழ்நாள் சாதனை, அவரை இலக்கண ஆய்வாளர் என்பதைவிட இலக்கணத் தமிழ்ச் சிந்தனையாளர் என்பது பொருந்தும். தொல்காப்பியமொன்றே அறிவியல் நோக்கிலான தமிழ்நெறி இலக்கணம் என்பது அவரது கொள்கை. மும்மொழியறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர், இலக்கண மொழியியல் ஆய்வாளர் முனைவர் க.பாலசுப்பிரமணியன் முதலியோர் பாலசுந்தரனாரின் உரைத் தெளிவுகளை ஏற்றுக் குறிப்பிட்டுள்ளனர். மறுப்புகளும் இல்லாமலில்லை. ஏற்போ மறுப்போ தமிழ் மரபிலக்கண ஆய்வில் பாலசுந்தரனாரின் பங்களிப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை. இந்த, மடை மாறிய தமிழ் இலக்கண நூல்கள் அவர் தொல்காப்பியத்தைக் கண்டு கொண்ட பாதையை விளக்குகிறது.
வித்துவான் பாவலரேறு பாலசுந்தரனார் (1924-2007) மரபிலக்கண அறிஞர்: படைப்பாளர்; ஏறத்தாழ ஐம்பது நூல்களின் ஆசிரியர். அவரது தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை (5 பகுதிகள்) வாழ்நாள் சாதனை, அவரை இலக்கண ஆய்வாளர் என்பதைவிட இலக்கணத் தமிழ்ச் சிந்தனையாளர் என்பது பொருந்தும். தொல்காப்பியமொன்றே அறிவியல் நோக்கிலான தமிழ்நெறி இலக்கணம் என்பது அவரது கொள்கை. மும்மொழியறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர், இலக்கண மொழியியல் ஆய்வாளர் முனைவர் க.பாலசுப்பிரமணியன் முதலியோர் பாலசுந்தரனாரின் உரைத் தெளிவுகளை ஏற்றுக் குறிப்பிட்டுள்ளனர். மறுப்புகளும் இல்லாமலில்லை. ஏற்போ மறுப்போ தமிழ் மரபிலக்கண ஆய்வில் பாலசுந்தரனாரின் பங்களிப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.