திரும்பத் திரும்ப இம்மனிதர்களின் கதையை எழுதி, சொல்லி, பேசி என்னவாகப் போகிறது என்ற சலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும், நான் யார், என்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு என்னுள் நான் கண்டறிந்த உண்மை, என்னால் இதை மட்டுமே செய்ய முடியும் என்பதுதான். என்னால் தத்துவங்களையோ, ஆன்மீக தரிசனங்களையோ, வாழ்வை உய்விக்கக் கூடிய பிரச்சாரங்களையோ செய்ய முடியாது. ஆனால், இவையனைத்தும் ஒரு தனிமனிதனின் அன்றாட வாழ்வில், அவனது நிறைகுறைகளில், அவனது வெற்றி தோல்விகளில், அவனது மேன்மை கீழ்மைகளில் கண்டடைய முடியுமென்று நம்புகிறேன். எனக்குத் தெரிந்த அத்தகைய மனிதர்கள் கதையை கடத்தும் ஒரு கருவியைப் போலவே இதுவரை செயல்பட்டுவந்திருக்கிறேன். இதைத் தொடர்ந்து செய்வேனா என்று தெரியவில்லை. ஆனால், செய்வது எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் எளிய மக்களுக்கானதாகவே இருக்குமென்று நம்புகிறேன். எப்போதும் போல் இப்போதும் என்னுள் பதியம் போட்டு வைத்திருந்த சில கதைகளை அறுவடை செய்திருக்கிறேன். இக்கதைகள் சூழ் உலகில் என்னுடைய கதைகளுக்கும் இடமிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
Be the first to rate this book.