மாவீரன் பகத்சிங்கின் வீரம் செறிந்த வரலாற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் அதேநேரத்தில் மக்கள் முன் நிகழ்த்தும் கலைவடிவமான, நாடக வடிவமாக, நளினம் கொண்டதொரு படைப்பாக படிப்பவர்… பார்ப்பவர் விரும்பும் புரட்சிகர அரங்கின் அரசியல் கருத்தாக்கத்தை உள்ளடக்கி உன்னதமாக்கியிருக்கிறார்.
எளிதில் பயன்படுத்தும் காட்சி அமைப்பு. செயல்திறன் மிக்க ஆளுமைகளை அறிமுகம் செய்யும் ஆணித்தரமான நடை… கவித்துவம் கலக்காத மக்கள் மொழி… இவற்றை உள்ளடக்கி உண்மையை உணரத் தந்திருக்கிறார் வெ. சங்கர்.
-முனைவர் இரா. காளீஸ்வரன்
வே.சங்கர் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் சிறார் இலக்கியம் சார்ந்து பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது படைப்புகளில் “எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு” “கானகத்தில் ஒரு கச்சேரி” மற்றும் “டுட்டுடூ” ஆகிய சிறார் நூல்கள் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இவரது கவிதைத் தொகுப்பு “அறுபது வயது அதிரூபன்” அமேசான் கிண்டிலில் இ.புத்தகமாக வந்துள்ளது.
Be the first to rate this book.