மதுரைதான் தமிழர்களுடைய பண்பாட்டுத் தலைநகரம். மதுரையிலே கேட்டா சொல்வார்கள். 'மதுரையைச் சுற்றிய கழுதையும் வெளியூர் போகாது' என்பார்கள். ஏனென்றால் மதுரைக்குள்ளே அத்தனை விசயங்களையும் பார்க்க முடியும். மதுரை, தென் மாவட்டங்களுக்கும் வட மாவட்டங்களுக்கும் நடுவிலே அமைந்தது. இலக்கியத்தில் நெடுங்காலமாகப் பேசப்படுகிற ஊர்.
அதுமட்டுமல்ல நெடுங்காலமாக நம் நாட்டிலே வணங்கப்படுகிற தெய்வங்களிலே மதுரையிலே இருக்கிற மீனாட்சித் தெய்வம் தாய்வழிச் சமூகத்தின் எச்சப்பாடு. தனியாக இன்றைக்கும் முடிசூடி அரசியாகிறாள். அவளுக்கு 'மதுரைக்கு அரசி' என்றே பெயர்.
ஆனால், அவள் கணவன் மதுரைக்கு அரசனல்ல. பெண்ணின் தனித்த உரிமையைப் பேணிக்காப்பது. சடங்குகளும் திருவிழாக்களும் அதிகமுள்ள ஊர் என்பதனாலே தனிச்சிறப்பு. குறிப்பாக அழகர் ஆற்றிலே இறங்குகிற சித்திரை திருவிழாவன்று பார்த்தால் கண்கொள்ளாக் காட்சி என்பார்களே அப்படியிருக்கும்.
- தொ.பரமசிவன்
Be the first to rate this book.