'நெற்கட்டான் செவ்வல் பாளையம் சங்கரன் கோயில் வட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. நெற்கட்டான் செவ்வல் பாளையம் தோன்றுவதற்கு முன்னர், பாண்டியர்கள் காலத்திலிருந்தே 'ஆவுடையார் புரம்' என்றே அழைக்கப்பெற்று வந்தது. மாவீரன் பூலித்தேவனின் காலத்தில்தான் நெற்கட்டும் செவ்வல் என்ற பெயரானது.
தென்தமிழகத்தில் முதன்முதலில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி வைத்தவர் மாமன்னன் பூலித்தேவன் 1801இல் நடந்த காளையார்கோயில் போர். 1857-இல் நடந்த சிப்பாய் புரட்சிக்கெல்லாம் முன்னோடியானது பூலித்தேவன் நடத்திய ஆங்கிலேயர்களுடனான போர்.
மாமன்னன் பூலித்தேவனின் பிறப்பு, வளர்ப்பு, தனிவாழ்க்கை, பாளையக்காரராக அவரின் சாதனைகள். ஆங்கிலேயரை எதிர்த்த அவரின் வீரம் ஆகியவற்றை ஆங்கிலேய ஏடுகள், ஆவணங்கள், மக்களின் வாய் மொழிக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் என விரிவாய், ஆராய்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார் ந.இராசையா.
Be the first to rate this book.