பா ராஜேந்திரன் வாழ்க்கைக் குறிப்பு : பிறப்பு 1954-ல் பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டில். தந்தையின் அஞ்சல் அலுவலகப் பணி காரணமாக அந்த மாவட்டத்தின் வெவ்வேறு ஊர்களில் பள்ளிக்கல்வி. புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ பட்டம், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவ முதுகலைப் பட்டம். 36 ஆண்டுகள் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தளவாடத் தொழிற்சாலை மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி 2014-ல் ஓய்வு பெற்றார். அதிலிருந்து திருவண்ணாமலையில் வாசம். கடந்த பத்தாண்டுகளாக ஆலயக் கலையிலும் நவீனத் தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம். 'திருவண்ணாமலையைச் சுற்றி' என்ற வலைப்பதிவில் வரலாற்றுச் சின்னங்களைப் பதிவிட்டு வருகிறார்.
Be the first to rate this book.