வெளிநாடுகளிலே, ஒருகாலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து, கோலாகலமான ஆட்சி செய்திருந்து, காவியர், ஒலியர், பூஜிதர் என்பவர்களால் போற்றப்பட்டு மகாசக்தி வாய்ந்த தெய்வங்கள் என்று புகழப்பட்டு, மணிமுடிதரித்த மன்னரையும், மதயானையை அடக்கும் மாவீரனையும் வணங்க வைத்து, அரசு செலுத்திய எத்தனையோ 'சாமிகள்' இதுபோது, அந்த நாடுகளிலே மாஜி கடவுள்களாகிவிட்டன என்பதை நம் நாட்டு மக்கள் அறியவேண்டும். கோடிக்கணக்கான மக்கள் கோடிகோடியாகப் பணம் செலவிட்டுக் கோயில் கட்டிக் கொலுவிருக்கச் செய்த கடவுளர், இன்று அங்கே மாஜிகளாயினர்! அதனால், அந்த நாடுகளில், மக்கள் கெட்டுவிடவுமில்லை, மதி தடுமாறிவிடவுமில்லை. அழிந்துபடவுமில்லை. அங்கு சுலையோ, காவியமோ, சிற்பமோ, ஓவியமோ அழிந்து போகவுமில்லை. மக்கள் நாஸ்திகர்களாகி விடவுமில்லை, அஞ்ஞானம் தொலைந்து மெய்ஞ்ஞானம் பிறந்தது.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.