ஹெப்சிபா தனது நாவல்கள் குறித்து அதிகம் பேசாதவர், எந்த இலக்கிய குழுவோடும் தன்னை இணைத்து கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதவர், மிக குறைவாக, ஆனால் சிறப்பாக எழுதியவர். நவீன விமர்சகர்களின் கருணையும் தயவும் மிக்க கடைக்கண் ஹெப்சிபாவின் நாவல் மீது இன்று வரை படவேயில்லை.
'புத்தம்வீடு' என்ற ஹெப்சிபாவின் நாவல் குறித்து சிஎல்எஸ் கருத்தரங்கில் வாசிக்கபட்ட கட்டுரையை படித்திருக்கிறேன். சில கல்லூரிகளில் புத்தம்வீடு பாடமாகவும் கூட வைக்கபட்டிருந்தது. அது மரபான தமிழ்நாவல்களில் இருந்து மாறுபட்டது. அதை விடவும் நான் மானீயை முக்கியமானதாக கருதுகிறேன்.
இன்று வாசிக்கப்படும் போதும் மா-னீ தேர்ந்த கதை சொல்லும் முறையும் கவித்துவ அழகுடன் கூடிய நடையும் நுட்பமான விவரணைகளும், மிகையற்ற உணர்ச்சிநிலைகளும் கொண்ட அற்புதமான நாவல் என்பதில் உறுதியே ஏற்படுகிறது.முக்கியமானதாகவும் நெருக்கமானதாகவும் தமிழ்சூழலில் இந்த நாவல் இன்னும் அதற்காகவே இந்நாவல் மறுபடி கொண்டாடப்படவும் வேண்டியிருக்கிறது உள்ளது வாசிக்கப்படவும்.
-எஸ்.ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.