இடுப்பை விட்டு நழுவுகிற பேண்டை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, செருப்பைக் கையில் தூக்கிப்பிடித்தபடி வெறுங்காலோடு நடந்து பாதுகாப்பு வாசலுக்குள் இனம்புரியாத அநாதைத்தனத்தோடு நுழைகிறேன். ஒரு யுகம் போல நீண்ட நேரம் அதிகாரி என் உடம்பை மசாஜ் செய்துவிட்டு, இவனால் உபத்திரவம் இல்லை என்று தீர்மானித்துப் போகலாம் என்று கையசைக்கிறார்.
பெல்ட், ஷூ, கோட் என்று ஆயிரம் பேருக்கு நடுவே நின்றபடிக்கு நான் கூச்சமே இல்லாமல் திரும்ப உடுத்துக் கொண்டிருந்தபோது, கைக்குழந்தையோடு நின்ற தாட்டியான ஒரு கருப்பர் இனப் பெண்மணியிடம் அதிகாரி தோரணையாகச் சொல்வது காதில் விழுகிறது.
“குழந்தை குடிக்கிற திரவ பதார்த்தம் இருக்கா? யாராவது அதை எங்க முன்னாலே குடிச்சுக் காட்டணும்”.
“நான் தாய்ப்பால்தான் கொடுக்கறது என் புள்ளைக்கு”.
அதிகாரி அவசரமாகப் போ ரைட் என்று கையசைக்கிறார்.
Be the first to rate this book.