லியாவின் ஊரில் தற்சமயம் பனிமழை பெய்துகொண்டு இருக்கின்றது. இதனால் ஊர் முழுக்க பனிப் பொழிவுதான். லியா வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. லியாவின் வீட்டு வாசலில் ஓர் அஞ்சல் பெட்டி இருக்கின்றது. அது லியாவின் உயரத்தினை விட பெரியதாக இருக்கும். லியாவிற்கு அது ஒரு மனிதன் போலத் தோன்றும். அது, தலை கருப்பு நிறத்திலும் உடல் சிகப்பு நிறத்திலும் இருக்கும் மனிதன் என்பாள்.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.